இராசபாளையம் அருகே தரைப்பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றது: பொதுமக்கள் பாதிப்பு

இராசபாளையம் அருகே  தரைப்பாலத்தை வெள்ளம்    அடித்துச் சென்றது: பொதுமக்கள் பாதிப்பு
X
சொக்கநாதன் புத்தூர் பகுதியில் தரைப்பாலம் நீரில் அடித்துச் சென்றதால் மூன்று கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில், கடந்த 4 நாட்களாக பெய்த பருவமழையின் காரணமாக பெரியகுளம் கண்மாய் உட்பட பல்வேறு கண்மாய்கள் நிறைந்து தண்ணீர் மாறுகால் பாய்வதால், சொக்கநாதன்புத்தூர்லிருந்து- மாங்குடி, மீனாட்சிபுரம், சங்கரன்கோவில் வரை செல்லக்கூடிய சாலையில் தரைப்பாலம் சேதமடைந்து தண்ணீர் செல்வதால், இந்த பகுதிக்கு செல்ல கூடிய பொது மக்களும் மற்றும் இந்த சாலையை பயன்படுத்தி விவசாயத்திற்க்கு செல்லக்கூடிய விவசாயிகளும் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர்.

இந்த தரைப்பாலத்தை சரி செய்து மேம்பாலமாக கட்டி தர கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில், இதுபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், பாதிப்பு ஏற்படாமலிருக்க தண்ணீர் வடிந்தவுடன் இந்த சாலையை சரி செய்து பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்