வெள்ளம் பாதித்த தூத்துக்குடிக்கு நகராட்சி சார்பில் பொருட்கள்

வெள்ளம் பாதித்த தூத்துக்குடிக்கு   நகராட்சி சார்பில் பொருட்கள்
X

ராஜபாளையம் நகராட்சி சார்பில், பொருட்கள் துாத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Flood Relief Material To Tuticorin தூத்துக்குடியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராஜபாளையம் நகராட்சி சார்பில் 1 லட்சம் மதிப்பிளான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்.

Flood Relief Material To Tuticorin

தமிழகத்தில் வடகிழக்கு மழை துவங்குவதற்கு முன்னரே தமிழக அரசானது முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்தது. சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலானது சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியது. இதுவரை சென்னை இதுபோன்ற மழையினைச் சந்தித்ததே இல்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

தற்போது தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் கடந்த சில நாட்களாகவே கனத்தமழை பெய்ததால் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் பாதிப்படைந்தது. ரோடுகள் நீரில் மூழ்கின. ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்திய ரயிலில் கடந்த ௩நாட்களாக குடிநீர் உணவு இன்றி தவித்தவர்களுக்குஊர்மக்கள் தான் உணவு சமைத்து வழங்கினர். மழை வெள்ளம் குறைய துவங்கியவுடன் பின் அவர்களை ரயிலில் இருந்து மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது அரசு.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி சார்பில், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதி மக்களுக்கு, இராஜபாளையம் நகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில், பால், ரஸ்க், ரொட்டி மற்றும் உணவு சமைக்க தேவையான உணவு பொருட்கள் குடிநீர் பாட்டில்கள் உட்பட 4000 அனுப்பி வைக்கப்பட்டது.

இராஜபாளையம் அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வினை, நகர மன்றத் தலைவர் பவித்ரா ஷியாம் முன்னின்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் நாகராஜன், இராஜபாளையம் திமுக கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா