ராஜபாளையம் அருகே விஷவாயு தாக்கி இறந்த 2 பணியாளர் குடும்பத்திற்கு நிதி உதவி
விஷ வாயு தாக்கி உயிரிழந்த இரண்டு பணியாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பாதாள சாக்கடை மூலம் தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தமிழக அரசு மீது குற்றச்சாட்டினர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மலையடிப்பட்டி அருகே காவலர் குடியிருப்பு பகுதியில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதாக, அலுவலகத்திற்கு தகவல் தெரிந்ததை அடுத்து, ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றக்கூடிய பொறியாளர் கோவிந்தராஜ் மற்றும் தூய்மை பணியாளர் ஜான் பீட்டர் ஆகிய இருவரும் பாதாள சாக்கடை குழாய் அமைந்துள்ள பகுதியில் ஒவ்வொரு மூடியாக திறந்து பார்த்து வந்தனர்.
இந்நிலையில் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை திறந்து பார்த்தபோது, தூய்மை பணியாளர் ஜான் பீட்டர் மயங்கி குழாயில் உள்ளே விழுந்துள்ளார். இவரை, காப்பாற்றுவதற்காக சென்ற பொறியாளர் கோவிந்தராஜன், மயங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கு அனுப்பி வைத்த பின்பு , உடலை உறவினரும் அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மத்திய சுகாதார பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உயிரிழந்த ஜான் பீட்டர் மற்றும் கோவிந்தராஜ் குடும்பத்தினை சந்தித்து, பாதாள சாக்கடை ஒப்பந்த பணி எடுத்த ஈகோ ப்ரொடக்ஷன் கம்பெனி சார்பில் தலா ரூ.30 லட்சம் காசோலையை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறும்போது:
பாதாள சாக்கடை பணியில் துப்புரவு செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தமிழக அரசும் நகராட்சி நிர்வாகமும் வழங்கவில்லை. தொழில் முன்னேற்றத்தில் தமிழக அரசு முன்னோக்கி சென்றாலும், இது போன்ற விஷயத்தில் பின்தங்கி உள்ளதாக குற்றச்சாட்டு முன் வைத்தார்.
மேலும், தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பணியில் உள்ள பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு பதிலாக பணியமற்றப்படும் வழிமுறை பின்பற்றாமல், ஒப்பந்தம் அடிப்படையில் பணியமற்றுவதை தவிர்க்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் பணி செய்யும் பொழுது, பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டும் . இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிய வேண்டும்.
அதேபோல், வீடுகள் அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற மீத்தேன் வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டால், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க மென கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu