மறைந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு சங்கம் சார்பில் நிதியதவி

மறைந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு சங்கம் சார்பில் நிதியதவி
X

புகைப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் உறுப்பினர் மறைவுக்கு சங்கத்தின் சார்பில் 85 ஆயிரம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டது

உறுப்பினர் மறைவுக்கு புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் 85 ஆயிரம் குடும்ப நல நிதியுதவி

புகைப்பட கலைஞர்கள் நல சங்க உறுப்பினரின் மறைவுக்கு ராஜபாளையம் சங்கத்தின் சார்பில் 85 ஆயிரம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதியில், செயல்பட்டு வரக்கூடிய இராஜபாளையம் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் 130 மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.இந்த நிலையில், கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு சங்க உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். இது குறித்து ,மாவட்ட சங்கத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அதன் அடிப்படையில் மாவட்டச் சங்கம் குடும்ப நலநிதியாக 25 ரூபாயும் இராஜபாளையம் கிளைச் சங்கம் சார்பில் 60,000 நிதி மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் குடும்ப நல நிதியாக மறைந்த சங்க உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு சங்க நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business