காரியாபட்டி அருகே கண்மாயில் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

காரியாபட்டி அருகே கண்மாயில்  நிரம்பியதால் விவசாயிகள்  மகிழ்ச்சி
X

காரியாபட்டி அருகே கண்மாய் நிரம்பியதால் வெளியேறிய உபரி தண்ணீரை பார்த்து மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்

சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரசகுலம் கண்மாயில் மறுகால் ஓடியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அசோலா கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் ஓடியதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நடப்பு ஆண்டில் அக்.மாதம் 122 மி.மீ. நவ. மாதம் 145 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நவ.22 வரை நடப்பாண்டில் 757.85 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரி மழையை ஒட்டி மழை பதிவாகி இருந்தாலும், பெய்த மழை அனைத்தும் காட்டுமழையாக பெய்துள்ளது. அணைகள், கண்மாய்களுக்கு நீர்வரத்து இருக்கும் வகையில் மழை பொழிவு இல்லை. டிச.வரை மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருப்பதால் மழை பெய்யுமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை, இருக்கன்குடி, சாஸ்தா கோயில் ஆகிய 8 அணைக்கட்டுக்கள், 708 ஊராட்சிகள் கண்மாய்கள், 290 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்பட 1038 கண்மாய்கள், 33,351 பாசன கிணறுகள் உள்ளன.

ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பழுது காரணமாக வரும் மழைநீர் முழுமையாக வெளியேறி அணை காலியாக இருக்கிறது. மற்ற 7 அணைகளில் பாதிக்கும் குறைவான மழைநீரும், கண்மாய்களின் வரத்து கால்வாய், ஆக்கிரமிப்புகளால் விவசாயத்திற்கு தேவையாக நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

ஊராட்சி ஒன்றிய கண்மாய்களை நம்பியே சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றியக் கண்மாய்கள் மேடு தட்டி, மடைகள், கலுங்குகள் உடைந்து கிடக்கிறது. அவற்றை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 20 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும், விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், நிலையூர் கால்வாய் திட்டம் மூலம் காரியாபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதன் பேரில், தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிலை ஒரு கால்வாய் மூலம் வந்த தண்ணீர் ஆனது, குலம் குறண்டி மற்றும் அரசகுலம் கண்மாய்களுக்கு நிரம்பியது .

நீண்ட காலமாக அரசகுலம் கண்மாயில் தண்ணீர் நிரம்பினாலும் மறுகால் போகவில்லை. சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரசகுலம் கண்மாயில், மறுகால் ஓடியது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இன்று காலை மறுகால் ஓடியதுக்காக தடுப்பணை அருகே சிறப்பு பூஜை நடைபெற்றது.

கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் மறுகால் ஓடும் இடத்தில் பூத்தூவி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், காரியாபட்டி திமுக செயலாளர்கள் செல்லம் கண்ணன் மாவட்டக் கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் குறண்டி சிவசக்தி, மாங்குளம் மணிவண்ணன், ஒன்றிய தி.மு.க துணைச் செயலாளர் குருசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!