விருதுநகர் மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21 மற்றும் 22 -ஆம் தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் கல்விக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி (புதன் கிழமை), 22ம் தேதி (வியாழன் கிழமை) ஆகிய 2 நாட்களிலும், காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெறகிறது.

இந்த சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் சாத்தூர் பகுதி மாணவர்களுக்காக சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, திருவில்லிபுத்தூர் ஸ்ரீபாலகிருஷ்ணா கல்லூரி, வத்திராயிருப்பு கலசலிங்கம் பல்கலைக்கழகம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி, நரிக்குடி மற்றும் திருச்சுழி மாணவர்களுக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியிலும் சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் நகல்களுடன் கல்விக்கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

கல்விக்கடன்...

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. மேலும் மற்ற பிரிவு மாணவர்கள் உயர்கல்விக்கு அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கல்வி கடன்களையும் அளிக்கின்றனர். இதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து எளிதாக கடன் பெற்று உயர் கல்வியை தொடரலாம். கல்விக்கடன் பெறுவதற்கு உரிய ஆவணங்கள் அவசியமானதாகும். மேலும் இதற்கு பல்வேறு விதிமுறைகளும், நிபந்தனைகளும் உள்ளது.

அதனை பின்பற்றும் போது எளிதாக கல்விக்கடனை பெற முடியும். பல்வேறு நிதி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிக்க முன்வந்துள்ளனர். மாணவர்கள் கல்வியை முடித்த பிறகு உரிய காலத்தில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.

இந்தியாவில் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.நீங்கள் கடன் பெற உள்ள வங்கியில் கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை பெற்று பிழையின்றி, முழு தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.கடன் பெறவுள்ள வங்கியில் தேர்வாகியுள்ள கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரர் ஆகியவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைக்க வேண்டும். புகைப்படம் சமீபத்திய புகைப்படமாக இருக்க வேண்டும் என வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!