எம்ஜிஆரை புகழ்ந்து பேசிய ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர்...!

எம்ஜிஆரை புகழ்ந்து பேசிய ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர்...!
X

, இராஜபாளையம் சேத்தூர் சேவகபாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று 40 டெஸ்ட் பெஞ்சுகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்கினார் .

பள்ளி கல்விக்காக சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டவர் எம்ஜிஆர் என்றார் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன்

ராஜபாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு டெஸ்க் பெஞ்சும் வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்காக சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டவர் எம்ஜிஆர் என புகழ்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சேத்தூர் சேவகபாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று 40 டெஸ்ட் பெஞ்சுகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்கினார். பின்னர், மாணவிகளிடம் உங்களுக்கு தேவையானவைகளை கேளுங்கள் செய்து தருகிறேன் கூறினார். மாணவிகள் தாங்கள் கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் நாங்களே பள்ளியை துப்புரவு செய்து வருகிறோம் அதற்கு துப்புரவு பணியாளர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதைச்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பேசியதாவது, எம்ஜிஆர் உடல்நல குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்றபோது, ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த டாக்டர் வர் அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சை பெற்று வீடு திரும்பி எம்ஜிஆர் அந்த மருத்துவர் அழைத்து உங்களுக்கு என்ன வேண்டும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட பொழுது, பணம் தேவையில்லை ராணுவத்தில் ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார். அவரை இந்த பகுதியில் பள்ளியில் பணியாற்ற ஆணை வழங்க வேண்டுமென கூறியுள்ளார்.

அதை ஏற்றுக் கொண்ட, அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் உடனடியாக தலைமை ஆசிரியராக நியமனம் செய்தார். மேலும், பள்ளி மாணவ மாணவிகளுக்காக பல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டவர் என்று திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை புகழ்ந்தது ஆச்சரியமும் வியப்பாக இருந்ததாக உடன் இருந்த திமுகவினர்கள் முணுமுணுத்தனர்.

Tags

Next Story