விருதுநகர் மாவட்ட கதர் நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ 2 கோடி

விருதுநகர் மாவட்ட கதர் நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு  ரூ 2 கோடி
X

விருதுநகர் கதர் நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடக்கி வைத்தார்

அரசு அலுவலகங் களில் தற்காலிக விற்பனை மையங்கள் அமைக்கப்படஉள்ளன. கதர் துணிக ளுக்கு 20 % சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது

விருதுநகர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு, 2 கோடி ரூபாய்க்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் ரெங்கப்ப நாயக்கன்பட்டி, மங்காபுரம், வன்னியம்பட்டி பகுதிகளில் 3 கிராமிய நூற்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த 3 நூற்பு நிலையங்களில் 45 ராட்டைகள் மூலம் கதராடைகள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையங்களில் வரும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜெயசீலன் பேசும் போது, தீபாவளி பண்டிகைக்காக அரசு அலுவலகங் களில் தற்காலிக விற்பனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கதர் துணிகளுக்கு 20 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1 கோடியே, 80 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil