இராஜபாளையத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய எம்.எல்.ஏ.

இராஜபாளையத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய எம்.எல்.ஏ.
X
இராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தீபாவளி கொண்டாடினார்.
இராஜபாளையத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளியை எம்.எல்.ஏ. கொண்டாடினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஒவ்வொரு தீபாவளிக்கும், இராஜபாளையத்தில்பொன்னகரம் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் தென்றல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் இருக்கக்கூடிய 300 குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளி திருநாளன இன்று, இரண்டு காப்பகத்திற்கும் சென்று குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடி க மகிழ்வித்தார் .

இது அந்த குழந்தைகள் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளும் சட்டமன்ற உறுப்பினருக்கு தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு உற்சாகமாக தீபாவளி திருநாளை கொண்டாடினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!