பாதுகாப்பு தீபாவளி: ராஜபாளையத்தில் போலீசார் விழிப்புணர்வு

பாதுகாப்பு தீபாவளி: ராஜபாளையத்தில்  போலீசார் விழிப்புணர்வு
X

விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது குறித்து, ராஜபாளையம் பகுதியில், தீயணைப்புத்துறை சார்பில்  கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது பற்றி, ராஜபாளையத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தீயணைப்புத்துறை சார்பில், விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தை, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன் துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் ராஜூக்கள் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து, சங்கரன்கோவில் முக்கோணம் சாலை வரை, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில், ராஜபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்களும் கலந்து கொண்டு, விபத்துகளை தவிர்க்கும் முறைகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Tags

Next Story
ai future project