இராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

இராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
X

ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடியில் செயல்படும் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் கலந்து கொண்டனர்.

நாக்-அவுட் முறையில், இரண்டு ஆட்டக்களங்களில் நடைபெற்ற போட்டிகளை மூத்த பயிற்சியாளர்கள் தொடங்கி வைத்தனர். இதில், 7, 11, 14, 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் 70 எடை பிரிவுகளில் தனித் தனியாக நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கான போட்டிகள் 20 சுற்றுக்களாக நடத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திண்டுக்கலில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.மற்ற வயது பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி மாதம் 4 முதல் 6 ம் தேதி வரை திண்டுக்கலில் நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story