காரியாபட்டி அருகே வீடுகள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல்

காரியாபட்டி அருகே வீடுகள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல்
X

திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது

திருச்சுழி அருகே உடையனாம்பட்டி ஊராட்சியில் பசுமை கிராம திட்டம் சார்பாக மரம் வளர்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் இணைந்து பசுமை கிராம திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் குறுங்காடு வளர்த்தல், ஊரணி, கண்மாய்கரையில் மரம் வளர்த்தல், ஊராட்சியில் உள்ள தரிசு நிலங்களில் ஊரக வளர்ச்சி துறை, ந, வனத்துறை மற்றும் வேளாண்மை துறைகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், இல்லங்கள் தோறும் தென்னங்கன்று. மற்றும் மாமரக்கன்றுகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் செயல் படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமுருகன் பொது மக்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். உடையனாம்பட்டி ஊராட்சியில் பசுமை கிராம திட்டத்தின் மூலமாக இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகளை முறையாக பாதுகாப்பாக வளர்க்கும் இல்லத்தரிசி களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தலைவர் பேசினார் உடையனாம்பட்டியை பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றுவோம் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார். .

நிகழ்ச்சியில், கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆசிரியர்கள் குருசாமி, ஆறு முகாம் பணித்தள பொறுப்பாளர் வினோதினி மாலை நேர கல்வி மைய பயிற்றுநர்கள் ராமலட்சுமி, புவனா மற்றும் பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!