அருப்புக்கோட்டை அருகே வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர், சிறப்பு அலுவலர் ஆய்வு

அருப்புக்கோட்டை அருகே வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர், சிறப்பு அலுவலர் ஆய்வு
X

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் பல்வேறு அரசு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் பல்வேறு அரசு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்ப குதிகளில், ( குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசியவேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்கள், இராமனுஜபுரம் ஊராட்சியில், அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்துறை ஆகியவற்றை கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு. அலுவலர் மரு.ஆர்.ஆனந்த்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோபாலபுரம் ஊராட்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம், குழந்தை பருவத்திலே, அவர்களுடைய கற்றல் ஆர்வத்தை தூண்டும் வகையில், மொழிவளர்ச்சி, உடல் வளர்ச்சி, சமூகமன எழுச்சி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, அறிதல் திறன் வளர்ச்சி போன்ற 5 வகையான வளர்ச்சியை தூண்டும் வகையில், கூடங்குளம் அனல் மின்நிலையம் திட்டம் - சமூக பொறுப்பு நிதியின் கீழ் 12.80 இலட்சம், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் உள்பட மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள மாதிரி குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகள், கற்றல் உபகரணங்கள் மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் முறை குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மரு.ஆர்.ஆனந்த்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோபாலபுரம் ஊராட்சியில், காரீப் முன் பருவத்திற்கான பயிற்சி பெற்ற விவசாயியின் நிலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்திபயிரில், ஊடு பயிராக பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமனுஜபுரம் ஊராட்சியில், ஊரக வளர்ச் சித்துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டிசெட்டி ஊரணியில், ரூ.13.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்துறையை, நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!