தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க கோரி போராட்டம்

தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க கோரி போராட்டம்
X

கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்கிட வேண்டும், டாக்டர் முன்னிலையில் உடல் பரிசோதனை செய்து தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும், கொரோனோ சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை அரசு மருத்துவமனைகளில் வழங்கிட வேண்டும், கொரோனோ பரிசோதனைகளை அதிகப்படுத்தி முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு சார்பில் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் ராஜபாளையம் அரசு மகப்பேறு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், பிரசாந்த், நகர குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவஞானம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்