காரியாபட்டியில் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

காரியாபட்டியில் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
X

100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பாராட்டு.

அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக 2022 - 23 கல்வி ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெயசிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி மற்றும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

அப்போது ஆட்சியர் தெரிவிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், படிப்பில் நன்கு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெற்றால், அவரால் பள்ளிக்கும், பெற்றவர்களுக்கும் பெருமை.

மாணவர்களை நல்வழிப்படுத்தி ,அதிக மதிப்பெண் பெற வைப்பது, ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. மாணவர்களும், படிக்கின்ற காலங்களில், ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது மிக முக்கியம்.

மாணவர்கள், நல்ல பாதையில் பயணிக்க ஆசிரியர்கள் அவ்வப்போது நல்ல கருத்துக்களை, மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்.

இன்றைய சமுதாயத்தில், மாணவர்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம், அம் மாணவனின் பெற்றோர்கள் கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்

Tags

Next Story