உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளை , மாவட்ட ஆட்சியர் சந்தித்தார்.
Collector discussed with students
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஆங்காங்கே உண்டு உறைவிடப்பள்ளிகள் இயங்கி வருகிறது.மாணவிகள் அங்கேயே தங்கி கல்வி கற்கும் பள்ளி அது.அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும்பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்படுகிறது. இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு உண்டு உறைவிட பள்ளியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அந்த வகையில்,
விருதுநகர் மாவட்டம்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மற்றும் சுரபி நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு, மாணவிகளை சந்தித்து கலந்து
ரையாடினார். அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கற்றல் திறன், அடிப்படை வசதிகள், தினமும் வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மாணவர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். மேலும், உண்டு. உறைவிடப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் தங்கி படிக்க வாய்ப்பு வழங்க ஆவண செய்யுமாறு மாணவிகள் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில், சுரபி நிறுவனத் தலைவர் விக்டர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu