ராஜபாளையம் அருகே மாணவரை தாக்கிய பள்ளித் தாளாளர் மீது வழக்கு
ராஜபாளையம் காவல் நிலையம்(பைல் படம்)
ராஜபாளையம் அருகே மாணவரை தாக்கியதாக, உண்டு உறைவிடப்பள்ளி தாளாளர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மருது நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிலிஸ்டர் (49). இவர் அய்யனார் கோவில் சாலையில், உண்டு உறைவிடப்பள்ளி நடத்தி வருகிறார். அதன் தாளாளராகவும் இருந்து வரும் சிலிஸ்டர், அங்கு படித்து வரும் கடலூர் மாவட்டம், மேலகுமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (13) என்ற சிறுவனை, கடந்த 9ம் தேதி தாக்கியதாக வீடியோ ஆதாரத்துடன், சைல்ட் லைன் (1098) எண்ணுக்கு புகார் வந்தது. விருதுநகர் மாவட்ட குழந்தை பாதகாப்பு அலுவலர் மீனாட்சி உத்தரவின் பேரில், சைல்ட் லைன் குழுவினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், உண்டு உறைவிடப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், குழந்தை பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர் ஜானகி, சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தாளாளர் சிலிஸ்டர் மீது, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணிகள்... ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் 38 மாவட்டங்களிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகானது செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவா் உள்ளார். அவரின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உள்ளார்.
சட்டத்திற்குட்பட்டு சிறப்பு தத்துவள மையத்தின் வாயிலாக குழந்தைகளை முறையான தத்து வழங்குதல்.பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணி மேற்கொள்ளுதல். குழந்தை திருமணத்தை தடுத்தல்.குழந்தை தொழிலாளரை மீட்டல். குழந்தை பிச்சையெடுத்தலை தடுத்தல்.குழந்தை கடத்தலை தடுத்தல்.பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்.பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மீட்கபட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்குதல் மற்றும் பின் தொடர் பணிகள் மேற்கொள்ளுதல்.
குழந்தை பாதுகாப்பு குறித்து பள்ளிக் குழந்தைகள், குழந்தை தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணாவு வழங்குதல்.குழந்தை தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்துதல்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அதன் பங்கு தாரர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் சார்ந்த திறன்வளர்ப்பு பயிற்சி முகாம்கள் நடத்துதல்.மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்துதல்.வட்டார, கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடத்துதல். போன்ற பணிகளை குழந்தைகள் பாதுகாப்பு அலகு மேற்கொண்டு வருகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu