/* */

விருதுநகரில் பள்ளிக்கூடம் அருகில் மதுபான கடையை மூட கோரி பா.ஜ.க. மனு

விருதுநகரில் பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுபான கடையை மூட கோரி பா.ஜ.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

விருதுநகரில் பள்ளிக்கூடம் அருகில் மதுபான கடையை மூட கோரி பா.ஜ.க. மனு
X

விருதுநகரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாஜக சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் ராமநகர் அருகே அரசு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது .இதன் அருகே, திடீரென கடந்த வாரம் டாஸ்மார்க் கடை புதிதாக திறக்கப்பட்டது.இந்த பகுதியில், டாஸ்மார்க் கடை திறக்க கூடாது என, நள்ளிரவில் கடையை முற்றுகையிட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதைத் தொடர்ந்து, இராஜபாளையம் காவல் துறை கண்காணிப்பாளர் பீர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடை மூடப்படும்/ வருவாய்துறையினரி டம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, உத்தரவாதம் கொடுத்தார்.

ஆனால், கடை திறக்காமல் கடையில் உள்ள பொருட்கள் எடுக்காமல் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும், பள்ளிக்கூடம் அருகே இருப்பதால் உடனடியாக இந்த கடையை மாற்ற வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும் என, அப்பகுதி மக்கள் தேரிவித்துள்ளர்.

இது சம்பந்தமாக , வட்டாட்சியர் சீனிவாசனிடம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட த்தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் தமிழ்ச்செல்வன், ராஜபாளையம் நகர தலைவர் ராஜகோபால், ஒன்றிய தலைவர் பாச சக்தி ஆகியோர் மனு கொடுத்தனர். விரைவில், கடை இடமாற்றம் செய்யவில்லை என்றால், மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தனர்.

Updated On: 30 Aug 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...