/* */

ராஜபாளையத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடத்துக்கு பூமி பூஜை

ராஜபாளையத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடத்துக்கான பணிகளை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் புதிய  ரேஷன் கடை கட்டிடத்துக்கு  பூமி பூஜை
X

ராஜபாளையத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடத்துக்கான பணிகளை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தொடக்கி வைத்தார்

ராஜபாளையம் அருகே, ரேசன் கடை புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள, ஜமீன்நல்லமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை மாற்றியமைத்து ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, புதிய ரேசன் கடைகள் கட்டுவதற்காக 12 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தார்.

புதிய ரேசன் கடை கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் பேசும்போது, ராஜபாளையம் தொகுதியில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள், விரைவில் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதற்கட்டமாக 5 ரேசன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் சிங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!