சிவகாசி அருகே மரங்களில் விழிப்புணர்வு பெயிண்ட் பூச்சு
சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள மரங்களுக்கு, வர்ணம் பூசி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மரங்களின் அவசியங்களை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி சார்பில், பசுமை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 'கிரீன் சிவகாசி' என்ற பெயரில், மாநகராட்சி பகுதியில் மரங்களின் அவசியம் குறித்தும், மரங்களின் தேவைகள் குறித்தும், மரங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் உள்ள மரங்கள் அனைத்திலும் பச்சை, மஞ்சள், பச்சை என வர்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன.
'கிரீன் சிவகாசி' விழிப்புணர்வு வர்ணம் பூசும் திட்டத்தை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தொடக்கி வைத்தார். இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 'கிரீன் சிவகாசி' திட்டத்தின் மூலமாக, சிவகாசி மாநகராட்சி பகுதியில், சாலையோரம் உள்ள மரங்கள் அனைத்திற்கும் வர்ணங்கள் பூசப்பட்டு கண்ணை கவரும் வகையில் பளிச்சென்று காட்சி தருகின்றன. மாநகராட்சியின் இந்த பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பொது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மரங்கள் மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் ...
மரங்கள் நமக்கு வாழ்க்கையின் அத்தியாவசியமான உணவு மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகின்றன. அவர்கள் தங்குமிடம், மருந்து மற்றும் கருவிகள் போன்ற கூடுதல் தேவைகளை வழங்கினர். அவை கார்பனை சேமித்து, மண்ணை நிலைப்படுத்தி உலக வனவிலங்குகளுக்கு உயிர் கொடுக்கின்றன. இன்று, அவற்றின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் நமது நவீன வாழ்க்கை முறைகளால் உருவாக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அவற்றின் பங்கு விரிவடைவதால் மரங்களின் அதிக நன்மைகள் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ உதவி வருகின்றன.
வீட்டில் மரம் வளர்ப்பதினால் நிறைய இயற்கை நன்மைகள் அடங்கியுள்ளது. இப்போது இருக்கின்ற காலத்தில் மரங்கள் வளர்ப்பது எல்லாம் மிகவும் அரிதாக மாறிவிட்டது. இயற்கை இடம் எல்லாம் நிலங்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு மரத்திலும் ஏராளமான இயற்கை குணங்கள் நிரம்பியுள்ளது.
மரம் நமக்கு என்ன தருகிறது?
மலர்கள், காய், கனிகள் தருகிறது.நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது.காற்றை சுத்தப்படுத்துகிறது.நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம்... காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.
மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.
மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும்.இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை அடக்க முடியாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu