காரியாபட்டி அருகே தொல்யியல் கள ஆய்வு
காரியாபட்டி பெ.புதுப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் ராகவனும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் பட்டபடிப்பு மாணவர்களான சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற் கொண்டனர். அதில், 3 அடி உயரமும் இரண்டே கால் அடி அகலமும் கொண்ட ஒரு சிலையை கண்டறிந்தனர்.
இது குறித்து, ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குநரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளரான சாந்தலிங்கத்திடம் கலந்து ஆலோசித்து, இச்சிற்பம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பம் என உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, ஆய்வாளர் கூறியதாவது :
சமணர் சிலையானது, வர்த்தமானர் என்னும் சமணர் சமயத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையாகும். இச்சிலை தியான நிலையில் அமர்ந்தவாறும் அர்த்தபரியங்க ஆசனத்தில் யோக முத்திரையுடனும் வடிவமைக்கப்பட்டடுள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபாவளையமும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், பக்கவாட்டில் சித்தாக்கிய இயக்கியும், இயக்கனான மாதங்கனும் சாமரம் வீசுவதுபோல் உள்ளது. இச்சமண சிலையை, அங்குள்ள மக்கள் சவணர் சாமி என்று அழைத்தும் தங்களின் குலதெய்வமாக எண்ணியும், குறிப்பிட்ட நாளில் பொங்கலிட்டும், முடிகாணிக்கை செலுத்தியும், வணங்கி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சமணர் சார்ந்த நிகழ்வுகளை தொடர்ச்சியாக கானும் போது மக்கள் சமய சகிப்புத்தன்மை கொண்டிருந்தனர் என்பதையும் உணரமுடிகிறது என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu