/* */

இராஜபாளையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

இராஜபாளையத்தில், போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

இராஜபாளையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
X

ராஜபாளையத்தில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவிய கண்காட்சியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நேருசிலையில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் திடல் வரை சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் ஒழிப்பு ,மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

பேரணியை, இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்தி கொடிய அசைத்து துவங்கி வைத்தார் . இந்த பேரணியில், காவல்துறை சேர்ந்த காவலர்கள் சீருடை உடன் கலந்து கொண்டனர். மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்ட இருசக்கர விழிப்புணர் பேரணி நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 450-க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Updated On: 7 Jan 2024 5:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...