ராஜபாளையத்தில் அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா

ராஜபாளையத்தில் அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா
X

ராஜபாளையத்தில் அதிமுக 52 -ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு, இனிப்பு வழங்கிய கட்சி நிர்வாகிகள்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது

அண்ணா திமுகவின் 52 வது தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவ ருமான எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவுக்கிணங்க. கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஏற்பாட்டில், தென்காசி சாலையில் பெரியார் சிலை அருகே உள்ள அதிமுகவின் கழக கொடியை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ், விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என். எம். கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தனர். இதையொட்டி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதேபோல், இராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன் தலைமையில் மலையடிப்பட்டி நான்குமுக்கு பகுதியில், கொடியேற்றி இனிப்புகள் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி , யோக சேகரன், ஆந்திரா குமார், திருப்பதி, கணேசன், ராஜா சோலைமலை எம்.சி., செல்லப்பாண்டியன், ராமகுமரேசன் , தும்பை முருகன் , மகளிரணி, ராணி, கவிதா, ஆனந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!