சிவகாசியில் ஆடி பெருக்கு விழா: கோவில்களில் சிறப்பு பூஜைகள்

சிவகாசியில் ஆடி பெருக்கு விழா: கோவில்களில் சிறப்பு பூஜைகள்
X

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி - வள்ளி - தெய்வானை சுவாமிகள் மயில் வாகனத்தில் வீற்றிருந்து வீதிவுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகாசியில் ஆடி பெருக்கு விழா முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஆடி 18ம் பெருக்கு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளியுள்ள முருகன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை அம்பாள்களுடன், பழைய விருதுநகர் சாலையில் உள்ள பி.கே.எஸ்.ஏ திருமண மண்டபத்தில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளினார். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது.

பின்னர் அம்மன் கோவில்பட்டி வடபாகம், இந்து நாடார்கள் உறவின்முறை தெருக்கட்டு சார்பாக சிறப்பாக பூஜைகள், குத்துவிளக்கு பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி - வள்ளி - தெய்வானை சுவாமிகள் மயில் வாகனத்தில் வீற்றிருந்து வீதிவுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்மன்கோவில்பட்டி வடபாகம் தெருக்கட்டு கமிட்டி, இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!