சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
X

குற்றவாளி பிச்சைமாரி

ராஜபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே சிறுமியை பாலியல் வனகொடுமை செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள, மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமாரி (45). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். பிச்சைமாரி கடந்த 2019ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டது. பிச்சைமாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூரணஜெயஆனந்த், குற்றவாளி பிச்சைமாரிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business