ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி 13 மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி 13  மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு
X

மாநிலப் போட்டிக்கு தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவர்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி 13 மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவர்கள் 13 பேர், மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜூடோ மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றது. சிவகாசி ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான, ஜூடோ மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஜூடோ போட்டியில் 5 மாணவர்களும், ஜிம்னாஸ்டிக் போட்டியில் 8 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 13 பேர், தகுதி சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளரும், தலைமை ஆசிரியருமா சாம்ஜெபராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துகள் கூறி பாராட்டு தெரிவித்தனர்.

மாநில போட்டிக்கு தேர்வு பெறும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் டேவிட் முத்துகுமாருக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்