கொரோனா முகாமில் மதிமுக எம்எல்ஏ மற்றும் துரை வைகோ ஆய்வு.

கொரோனா முகாமில் மதிமுக எம்எல்ஏ மற்றும் துரை வைகோ ஆய்வு.
X
அய்யனாபுரம் திமுக கிளைச் செயலாளர் அடைக்கலம்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி கொரோனா முகாமில் மதிமுக எம்எல்ஏ மற்றும் துரை வைகோ கொரோனா நோயாளியை காப்பாற்றி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டாக்டர் ரகுராமன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் கொரோனா குறித்த விழிப்புணர்வு, முக கவசம் அணிவது மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையும் ஆக்சிசன் சிலிண்டருடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமை பார்வையிடுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோ மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டாக்டர் ரகுராமன் உடன் மதிமுக நிர்வாகிகள் சென்றனர்.

அய்யனாபுரம் திமுக கிளைச் செயலாளர் அடைக்கலம் என்பவருக்கு கொரோனோ பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக துரை வைகோ மற்றும் டாக்டர் ரகுராமன் எம்எல்ஏ இருவரும் உடலை முழுதும் மறைக்கும் பாதுகாப்பு கவச உடை அணிந்து அடைக்கலம் என்பவரை தங்களது ஆம்புலன்சில் ஏற்றி ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்து முதலுதவி செய்தனர்.

அந்த ஆம்புலன்சிலேயே அழைத்து சென்று ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அடைக்கலத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் கொண்டு பாதுகாப்பாக சேர்த்தது குறித்து அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!