காரியாபட்டியில் பெண்ணிடம் பணப்பை அபேஸ்

காரியாபட்டியில் பெண்ணிடம் பணப்பை அபேஸ்
X

காரியாபட்டியில் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு குறித்து போலீசார் விசாரணை

காரியாபட்டியில் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அடுத்த சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவர் இன்று மதுரைக்கு பேருந்தில் சென்று விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காரியாபட்டி பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது தனது ஊர் வழியாக செல்லக்கூடிய நரிக்குடி பேருந்து வந்த நிலையில் பேருந்தில் ஏறினார். அதன் பின்னர் பேருந்தில் பயணச்சீட்டு எடுப்பதற்காக தனது பர்சை தேடி உள்ளார். அப்பொழுது பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு மற்றவர்களிடமும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதன் பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். காரியாபட்டி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற பொழுது தனது மணி பர்சை யாரோ திருடி விட்டதாகவும், அதில் தங்க மோதிரம், பணம், ஏடிஎம் கார்டு, உட்பட விலை உயர்ந்த செல்போன் வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காரியாபட்டி காவல்துறையினர் திருடிச் சென்ற நபர் குறித்து சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பயணிகளிடம் பையில் வெளியே தெரியும்படி பர்ஸ், செல்போன் போன்றவற்றை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!