அருப்புக்கோட்டை அருகே வார்டு உறுப்பினர் தேர்தல்: ஆர்வமுடன் வாக்களித்த 95 வயது மூதாட்டி

அருப்புக்கோட்டை அருகே வார்டு உறுப்பினர் தேர்தல்: ஆர்வமுடன் வாக்களித்த 95 வயது மூதாட்டி
X

அருப்புக்கோட்டை அருகே 95 வயது மூதாட்டி சுப்பம்மாள் என்பவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார்.

அருப்புக்கோட்டை அருகே வில்லிபத்திரி கிராமத்தில் 3 மற்றும் 5வது வார்டு மன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராமத்தில் 3-வது வார்டு மற்றும் 5வது வார்டு மன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் 5வது வார்டு மொத்தம் 254 வாக்காளர்கள் இதில் ஆண் வாக்காளர் 130 பேர் பெண் வாக்காளர் 124பேர் மொத்தம் 254 வாக்காளர்கள். இந்த வார்டில் மூன்று வேட்பாளர்கள் மூன்று சின்னங்களில் போட்டியிட்டு உள்ளனர். வசந்தகுமார் என்பவர் சாவி சின்னத்திலும் சரஸ்வதி என்பவர் சீப்பு சின்னத்திலும் நாகஜோதி என்றவர் கட்டில் சின்னத்தில் போட்டியில் உள்ளனர்.

தற்போது அந்த பகுதியில் உள்ள வாக்கு செடி மையத்திற்கு பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் 3வது வார்டில் மன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்த வாக்காளர்கள் 180 பேர் ஆண்கள் 88 பேர் பெண்கள் 92 பேர். இதில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். முத்துலட்சுமி என்றவர் சாவி சின்னத்திலும் கனகவல்லி என்பவர் சீப்பு சின்னத்திலும் பாலகிருஷ்ணன் என்பவர் கட்டில் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஐந்தாவது வார்டுக்கு வாக்குச்சாவடி மையத்திற்கு 95 வயதான சுப்பம்மாள் என்பவர் தள்ளாத வயதில் கம்பு ஊன்றி வாக்களிக்க வந்தார். அவரை உடனடியாக அங்கு இருந்த காவல்துறையினர் இரண்டு சக்கர வீல்சேரில் அவரை அமர வைத்து வாக்கு அளிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அவரை வாக்களிக்க வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!