அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை விழுந்து 2 பேர் காயம்

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை விழுந்து 2 பேர் காயம்
X

பைல் படம்.

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, கமுதி, ராமேசுவரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், காரியாபட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை பெயர்ந்து திடீெரன விழுந்தது. அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த தனியார் பஸ் நேரக் காப்பாளர் பூமிநாதன், டிரைவர் ஆகிய 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!