புரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி இரட்டை சிசுக்களுடன் பரிதாபமாக உயிரிழப்பு

புரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி இரட்டை சிசுக்களுடன் பரிதாபமாக உயிரிழப்பு
X
புரோட்டா சாப்பிட்டதினால் ஜீரண கோளாறால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரட்டை குழந்தையுடன் 5 மாத கர்ப்பிணி இறப்பு.

புரோட்டா சாப்பிட்ட காரணத்தினால் ஜீரண கோளாறு காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரட்டை குழந்தையுடன் 5 மாத கர்ப்பிணி இறப்பு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கன் - அனந்தாயி தம்பதியினர். சங்கன் என்பவரின் சொந்த ஊர் மடத்துபட்டி. திருமணமான பின் வதுவார்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். சங்கன் என்பவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2-வயது பெண் குழந்தையும் உள்ளது. அதற்குப் பின் தற்போது ஆனந்தாயி 5 மாத கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸ்கேன் பார்த்த போது இரட்டை குழந்தை உள்ளது என்பது தெரியவந்தது.

நேற்று இரவு புரோட்டா சாப்பிட்டு உள்ளார். என்பது தெரிய வருகிறது. புரோட்டா சாப்பிட்டபின் ஜீரண கோளாறு ஏற்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி 5 மாத கர்ப்பிணி அனந்தாயி இரண்டு மாத குழந்தையுடன் இறந்து விட்டார். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. 5 மாத கர்ப்பிணி இரட்டை குழந்தையுடன் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!