கையெடுத்து கும்பிட்டு போலீசார் கொரோனா விழிப்புணர்வு

கையெடுத்து கும்பிட்டு போலீசார் கொரோனா விழிப்புணர்வு
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேருந்து பயணிகளிடம் கொரோனோ குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கொரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் போலீசார் தொடர்ந்து கொரோனா குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் சென்று அருப்புக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி., சகாயஜோஸ் தலைமையிலான போலீசார் மாஸ்க் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை கையெடுத்து கும்பிட்டு எடுத்துரைத்து வருகின்றனர். போலீசாரின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்