சரியாக போடப்படாத சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டது

சரியாக போடப்படாத சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டது
X

அருப்புக்கோட்டையில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் கருப்பண்ணசாமி கோவில் தெருவில் புதிதாக அமைத்த சாலை பழுதடைந்ததால் உடனடியாக சீரமைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் கருப்பண்ணசாமி கோவில் தெருவில் புதிதாக சாலை அமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. புதிய சாலை ஒரு அடி உயரம் உயர்த்தப்பட்டதால், இந்த சாலையை பிரதான சாலையோடு இணைப்பதற்காக கான்கிரீட் கலவை கொண்டு சரிவு அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக சரிவு அமைக்காமல் அரைகுறையாய் பணிகள் மேற்கொண்டதால் கான்கிரீட் கலவை உடைந்து அங்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.

எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு சீரமைத்தனர்.

இது குறித்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி