பட்டாசு தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மத்திய அரசின் ஒரு சில திட்டங்களை விரைந்து செயல்படுத்தப்படும்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க, வீடு தோறும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்தப்படுத்தப்படும். சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் வாழ்க்கை மேம்பட, தேவையான கடன் உதவிகள் விரைந்து வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இனாம் திட்டத்தின் மூலம், நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கு தங்களுடைய விளைபொருட்களை அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு கணினி வாயிலாக விற்பனை செய்யும் இந்த திட்டத்தை, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும்.
மாவட்டத்தில், ஒரு லட்சம் கால்நடைகள் உள்ள பகுதியில், நடமாடும் கால்நடை மருத்துவக்குழு அமைக்கவும், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணி அமர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை உடனடியாகக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும் முடியும்.
ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில், டெல்லி ரயில்வே நிர்வாகம் தனியார் மயமாக்கப்பட்டது. அப்போதுஒப்புதல் வழங்கி அவர் , தற்போது மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவதாக, விமர்சனம் செய்து வருகின்றார். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. உரிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி அதனை சரி செய்யப்படும். பட்டாசு உற்பத்திக்கும் விற்பனைக்கு மத்திய அரசு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஒருசில மாநிலத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டிருக்கலாம். அதை சரிசெய்ய, எங்களை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நாடினால், உரிய தீர்வு காணப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu