அருப்புக்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு விநாடி-வினா போட்டி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு விநாடி-வினா போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
திமுக மகளிர் அணி சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னெடுப்பில் நடைபெறும் 'கலைஞர் 100 விநாடி வினா' போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உள்ள அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் மஹாலில் இன்று துவங்கியது.
'கலைஞர் 100 வினாடி வினா' போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி துவக்கி வைத்து, போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, விருதுநகர் தெற்கு திமுக மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில், கனிமொழி எம்.பி பேசும்போது: போட்டியில் பங்கேற்றவர்களின் உழைப்பு மற்றும் முயற்சிகளை காணும்போது, எதிர்காலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் உள்ளதாகவும், தமிழ் பெருமையும், வரலாற்றையும் புரிந்துக்கொண்டுள்ள நமது பிள்ளைகளின் கையில் இருக்கப் போகிறது என்ற நல்ல நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம்.எல்.ஏ, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மண்டல அளவிலான போட்டியில் (விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்) ஆகிய மாவட்ட குழுக்கள் பங்கேற்றனர். 18 வயதிற்கு மேற்பட்டோர் காண போட்டியில் சிவகங்கை அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் மோகன், அறிஷேவர், பிரபு ஆகியோர் பங்கேற்றனர். 18 வயதிற்கு உட்பட்டோர் காண போட்டியில் சிவகங்கை அணி வெற்றி பெற்றது, இந்த குழுவில் குகன், சிவசங்கர், குணால் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் பரிசு வழங்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu