திமுக என்பது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி : ஜான்பாண்டியன்
திமுக என்பது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது கூறினார்..
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சாத்தூர் அருகிலுள்ள நென்மேனி, சுந்தரகுடும்பன்பட்டி, நல்லான் செட்டிபட்டி, கால பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோது:
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, மத்திய பிஜேபி அரசு இணைந்து தேவேந்திர குல வேளாளர்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒன்றிணைந்த சமூகமாக்க வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றி தந்தனர். பள்ளர்,பண்ணாடி உள்ளிட்ட பல பிரிவுகளாக இருந்த நம்மை ஒன்றிணைத்த பெருமை இவர்களையே சாரும். தேவேந்திரகுல வேளாளர்கள் நன்றி மறவாதவர்கள், நன்றியுணர்வு அதிகம் உள்ளவர்கள். எனவே இந்த தேர்தலை நாம் அதிமுக அரசின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நமது நன்றி விசுவாசத்தை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திமுக என்பது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி. கம்பெனிக்கு ஓட்டு போடவேண்டுமா அல்லது மக்களுக்காக நிற்கும் மக்களை நம்பி நிற்கும் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டுமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியால் நமக்கு ஏதாவது இடைஞ்சல் இருந்திருக்கிறதா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அனைத்து ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடிய அளவில் ஆட்சி நடத்தியது அதிமுக. திமுகவில் ஒரு ஒன்றிய செயலாளர் அனைத்து அரசு அதிகாரிகளையும் மிரட்டுவார்கள், மக்களை மிரட்டுவார்கள், அடாவடி அராஜகம் செய்வார்கள். அப்படி அராஜக ஆட்சி நடத்தும் இவர்கள் வேண்டுமா அல்லது மக்களை அன்போடு அரவணைப்போடு ஆட்சி நடத்தி செல்லும் ஆட்சி வேண்டுமா ? சிந்தித்து அ.தி.மு.க வேட்பாளர் வைகைச்செல்வன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்பொழுது தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ளோம் இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட கோரிக்கையான பட்டியல் இன வெளியேற்றத்தை வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.
பொதுக்கூட்டம் பேரணியில் ஜான்பாண்டியன் உடன் அதிமுக சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வைகைச்செல்வன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu