அருப்புக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

அருப்புக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
X
விஜய் மக்கள் இயக்க விவசாய அணியினர் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி வருடந்தோறும் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம்

பாளையம்பட்டியில் அருப்புக்கோட்டை விஜய் மக்கள் இயக்க விவசாய அணியினர் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி வருடந்தோறும் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதே போல, இந்த ஆண்டும், இந்த திட்டத்தின் 50-வது நாளான நேற்று, அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள விஜய் மக்கள் இயக்க விவசாய அணி ஒன்றிய அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தலைவர் கோகுல் தலைமையில், விவசாய அணியினர் 109 ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அப்போது, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய தலைவர் சுமன் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture