அருப்புக்கோட்டை அதிமுகவுக்கு ரஜினி மக்கள் மன்றம் ஆதரவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரஜினி மக்கள் மன்றத்தினருடன் இணைந்து அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து அருப்புக்கோட்டை எம்எஸ் கார்னர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் திறந்தவாகனத்தில் நின்று தேர்தல் பிரச்சாரம் இது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய வேட்பாளர் வைகைச்செல்வன், வரும் சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டையில் அதிமுகவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவு நமக்கு மகத்தான வரவேற்பாக அமைந்துள்ளது. ரஜினி எப்போதும் நல்லவர்களுக்கு தான் ஆதரவு தருவார்.
அருப்புக்கோட்டைக்கு உதயநிதிஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வந்தபோது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ள கடையில் இரண்டு மூடை வெங்காயத்தை காணவில்லை திருடியது திமுகவினர் பின்னர் பெரிய பஞ்சாயத்திற்கு பிறகு பணத்தை வழங்கியுள்ளார்கள். ஆட்சியில் இல்லாத போது இரண்டு மூடை வெங்காயத்தை திருடிய திமுகவினர் ஆட்சிக்கு வந்தால், உங்கள் வீட்டுச் சாவி அவர்களிடம் தான் இருக்கும் அதிகார பசியோடு அலைகிறார்கள் திமுகவினர்.
ஆனால் தமிழக மக்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, 40 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திமுக வேட்பாளர் நாற்பதில் செய்யாததை 80தில் எப்படி செய்யப்போகிறார். அவர் நூறு ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு அவருக்கு நீங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் அருப்புக்கோட்டையில் சாய சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும், ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். திமுக குடும்ப அரசியல் செய்கிறது கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் ஸ்டாலினுக்குப் பிறகு அவரது மகன் உதயநிதி, தயாநிதி மாறன், கனிமொழி தற்போது இன்பநிதி, இன்பநிதி பிறந்ததும் திமுகவினர்
எங்களுக்கு அடுத்த தலைவர் பிறந்து விட்டார் என இனிப்புகள் வழங்குகிறார்கள் திமுகவில் வேறு தலைவர்களே இல்லையா, ஆனால் அண்ணா திமுகவில் அடிமட்ட தொண்டர்கள் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருக்கிறார்கள் அண்ணா திமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், கொரோனா காலத்தில் கொரோனா வந்துவிடும் என இஸ்லாமியர்களை ஒதுக்கி வைத்தார் திமுக வேட்பாளர் அண்ணா திமுகவில் குடும்ப அரசியல் இல்லை என பேசி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu