கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு:  அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்
X
அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த நூதன பிரசாரம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த நூதன பிரசாரம் நடைபெற்றது. அப்போது எமன் வேடன் அணிந்த ஒருவர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

அப்போது டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முக கவசம் அணியாமல் சென்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு முக கவசம் அணிவித்ததுடன், தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினார். நூதன முறையில் நடைபெற்ற இந்த பிரசாரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Tags

Next Story
ai marketing future