அருப்புக்கோட்டையில் புத்தக கண்காட்சி தொடக்க விழா
அருப்புக்கோட்டையில் புத்தக கண்காட்சி (பைல் படம்)
அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சார்பில் "நம் வாசிப்பு நம் விடுதலை" என்ற தலைப்பில் 4-ம் ஆண்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம வங்கியின் அருப்புக்கோட்டை கிளை முதன்மை மேலாளர் மகேந்திரன் புத்தக கண்காட்சியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடக்க விழாவையொட்டி "வீட்டுக்கு ஒரு நூலகம்" திட்டத்தின் கீழ் 30 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
வருகிற 8ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் கல்கி, பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், வைரமுத்து உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள், சிறுவரகளை மகிழ்விக்கும் கதை புத்தகங்கள் என ரூ.10 லட்சம் மதிப்புடைய 20 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஒரு சில பதிப்பகங்களின் புத்தகங்கள் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிததனர்.
ஓய்வு பெற்ற தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரி பி.எஸ்.போஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மீனாம்பிகை ஆனந்தன், சவுண்டையன், ரத்தினசாமி, காஜாமைதீன், கணேசன், பரமதயாளன் உள்ளிட்ட கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu