அருப்புக்கோட்டை: பிரச்சாரத்தை துவங்கிய திமுக எம்.எல்.ஏ

அருப்புக்கோட்டை: பிரச்சாரத்தை துவங்கிய திமுக எம்.எல்.ஏ
X

அருப்புக்கோட்டையில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய திமுக சட்ட மன்ற உறுப்பினரும் வேட்பாளருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பு என அனைத்து கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, தேர்தல் பணியில் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, அருப்பு கோட்டையில் போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று அருப்புக்கோட்டையில் உள்ள அண்ணா சிலை, தேவர் சிலை, முத்துரையர் சிலை போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவங்கினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி