அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் இடைவெளியை பின்பற்றாமல் குவிந்த மக்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் முழு ஊரடங்கு அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுவதால் பொதுமக்கள் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில் பஜார் பகுதியில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர் காய்கறி மார்கெட் அண்ணா பஜார் மெயின் பஜார் காசுக்கடை பஜார் சிட்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் முறையாக முகக்கவசம் அணியாமலும் பொதுமக்கள் குவிந்ததால் கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு என்றாலும் காய்கறி பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மதியம் 12 வரை செயல்படும். ஆனால் இன்றே அனைத்து பொருட்களையும் வாங்கி குவித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முண்டியடிக்கும் பொதுமக்களால் தீபாவளி பொங்கல் விற்பனை போல் பஜார் பகுதி காணப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலேயே அருப்புக்கோட்டையில் தான் அதிக அளவு கொரோனா பரவல் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கனோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது போல் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் குவியும் மக்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu