1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
X

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 இலட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அருப்புக்கோட்டையில் 1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பள்ளி அருகில் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1076 பயனாளிகளுக்கு ரூ.138.89 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்

பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஒன்றியங்களைச் சேர்ந்த 19 குழந்தைகளுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.57 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்

பின்னர் அமைச்சர் பெருமக்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 779 பயனாளிகளுக்கு ரூ.7,79,000/- மதிப்பிலான முதியோர் நிதி உதவித் தொகைகளும், 68 பயனாளிகளுக்கு ரூ.13,60,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 43 பயனாளிகளுக்கு ரூ.21,50,000/- மதிப்பிலான கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களுக்கான நிதியுதவிகளும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.4,59,000/- மதிப்பிலான மின் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், 164 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளும், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.13,60,000/- மதிப்பில் வீடு கட்டுவதற்கான உதவிகளும், கனிமவள நிதியின் கீழ் புலியூரான் ஊராட்சியில் ரூ.41,05,904/- மதிப்பில் சாலை, பேவர் பிளாக் மற்றும் குளியல் தொட்டி அமைத்தல் பணிகளும், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.36,75,000/- மதிப்பில் 7 சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளும், கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 19 குழந்தைகளுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.57 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைகளும் என மொத்தம் 1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தினந்தோறும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகளும், விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையிலிருந்து மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலைக்கு செல்லும் வகையில் ரூ.110 கோடி மதிப்பில் சுற்றுச்சாலை அமைக்கவும், நகர மற்றும் கிராம சாலைகளை அகலப்படுத்தவும் என குடிநீர், சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த தொகுதி மக்களுக்கு செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சசிகலா மற்றும் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு