அருப்புக்கோட்டையில் 90 மதுபாட்டில்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டையில் 90 மதுபாட்டில்கள் பறிமுதல்
X
அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 90 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அப்பதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் (வயது 44), கனகராஜ் (38) என்ப–தும், அனு–ம–தியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்–தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்–களிடம் இருந்து 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story