சாலை அமைத்து தரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாலை அமைத்து தரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
X

முத்தரையர் நகரில் உள்ள மண் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.

அருப்புக்கோட்டை அருகே சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தரையர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மழை பெய்தால் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் நடக்கவே சிரமப்படுகின்றனர்.

எனவே இப்பகுதியில் உடனே சாலை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story
ai automation in agriculture