பூக்கடையில் பூக்கள் பறிமுதல்.

பூக்கடையில் பூக்கள் பறிமுதல்.
X

முழு ஊரடங்கு உத்தரவை மீறி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பணை செய்த பூக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு அவர்களிடமிருந்து 50 கிலோ பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தகம், பால் விநியோகத்தை தவிர அனைத்து கடைகளும் இன்று இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பணை செய்த கடைகளில் நகராட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 50 கிலோவிற்கும் அதிகமான ரோஜா மல்லிகை மற்றும் பன்னீர் உள்ளிட்ட பூக்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கட்டுப்பாடுகளை மீறிய 3 பூக்கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!