கொரோனோ பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் அடையாள நோட்டிஸ் - அமைச்சர்.

கொரோனோ பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் அடையாள நோட்டிஸ் - அமைச்சர்.
X
வருவாய்துறை துறை அமைச்சர் அருப்புக்கோட்டையில் சொன்னது.

நாளை முதல் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை கண்டறிந்து வாசலில் அடையாள நோட்டீஸ் ஒட்டப்படும் என வருவாய்துறை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்திய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை கண்டறிந்து வாசலில் அடையாள நோட்டீஸ் ஒட்டப்படும்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டாலும் உயிர் போகும் அபாயம் இல்லை தடுப்பூசி செலுத்துவதை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் தனியார் மருத்துவமனையில் கோரோனோ பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் கைவிடப்பட்டவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

அதனால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அதிகமாக உயிரிழப்பதாகவும் மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரை பணயம் வைத்து பணி செய்வதாகவும் அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.கொரோனோ வைரசால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்கள் உறவினர்கள் தொடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என தெரிவித்தார்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி