கண்மாயில் இளைஞர் சடலம் போலீசார் விசாரணை

கண்மாயில் இளைஞர் சடலம் போலீசார் விசாரணை
X
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி கண்மாயில் இளைஞர் சடலமாக மீட்பு...கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி லிங்காபுரத்தை சேர்ந்த பொன்னையா ராஜம்மாள் என்பவர் மகன் செல்வராஜ் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜவுளித் தொழில் செய்து வரும் செல்வராஜ் சென்ற ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு வந்த நிலையில் கொரோனா காரணமாக லிங்காபுரத்திலேயே தற்போது வரை இருந்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டை விட்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் செல்வராஜ் பந்தல்குடி கண்மாயில் சடலமாக கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பந்தல்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்,

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் செல்வராஜின் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த பந்தல்குடி போலீசார் யாரேனும் செல்வராஜை கொலை செய்து சடலத்தை வீசி சென்றனரா இல்லை இறப்புக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் காணவில்லை என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!