ஊரடங்கை பயன்படுத்தி செல்போன் கடையில் கொள்ளை

ஊரடங்கை பயன்படுத்தி செல்போன் கடையில் கொள்ளை
X

செல்போன் திருட்டு (கார்ட்டூன் படம் )

அருப்புக்கோட்டையில்

அருப்புக்கோட்டை மரக்கடை பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள ராஜா என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். அத்தியாவசிய பொருட்களுக்கான விற்பனைக்கு மட்டும் நண்பகல் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் செல்போன் கடை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கை பயன்படுத்தி மர்ம நபர்கள் ராஜாவின் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த ஒன்பது செல்போன்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திறக்கப்பட்டாத கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஊரடங்கை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்ட சம்பவம் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!