/* */

விழுப்புரம் ரயில் நிலைய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

Basic Facilities -விழுப்புரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை முறைப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

விழுப்புரம் ரயில் நிலைய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
X

பைல் படம்.

Basic Facilities -அனைத்து அடிப்படை வசதிகளுடன் விழுப்புரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டுமென பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் ரெயில் நிலையம் தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னை, கோவை, திருச்சி போன்ற ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக முக்கிய சந்திப்பாகவும் உள்ளது.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, திருப்பதி, மயிலாடுதுறை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதுடன், சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், குருவாயூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையம் வந்து செல்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. மொத்தம் 117 ரெயில்கள், விழுப்புரம் வழியாக சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் என 14 ரயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்செல்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 35 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் எந்நேரமும் விழுப்புரம் ரயில் நிலையம் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்து தான் காணப்படும்.

இதுதவிர விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே முண்டியம்பாக்கத்தில் சரக்கு ரயில்கள் வந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் முனையமும் அமைந்துள்ளதால் சரக்கு ரயில்களும் விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அதிகளவில் ரயில்கள் வந்து செல்வதால் சில சமயங்களில் ரயில்களை நிறுத்த இடம் கிடைக்காமல் பல ரயில்கள், நிலையத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களின் எண்ணிக்கை வெறும் 6 மட்டுமே உள்ளது. கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைத்தால் இன்னும் வசதியாக இருக்கும் என பல காலமாக விழுப்புரம் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதுபோல் இருக்கின்ற 6 நடைமேடைகளிலும் போதிய அளவில் இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. அதுமட்டுமின்றி அனைத்து நடைமேடைகளிலும் முழுமையாக மேற்கூரை வசதிகளும் செய்யப்படாததால் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதனால் இங்குள்ள ரயில் நிலையத்திற்கு திருச்சி கோட்ட அதிகாரிகளோ, தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளோ ஆய்வுக்கு வரும்போது மட்டுமே ரயில் நிலையம் சுகாதாரத்துடன் பளிச்சென காட்சியளிக்கிறது. ஏனைய நாட்களில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ரயில் நிலைய சுவர்களில் சுவரொட்டிகள், விளம்பர கலாச்சாரங்களும் ஓங்குகின்றன. பயணச்சீட்டு எடுக்கும் மையத்தில் போதிய இடவசதி இல்லை. ஒவ்வொரு நடைமேடையிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள போதிலும் சில சமயங்களில் குடிநீர் சரிவர வருவதில்லை. பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையமும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

அதுபோல் நடைமேடைகளில் இருக்கும் கழிவறைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்று பழுதடைந்து பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருக்கிறது. அதுபோல் ரயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மேற்கூரை வசதிகள் இல்லாததால் அங்கு நிறுத்தப்படுகிற இருசக்கர வாகனங்கள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் காய்ந்து வருகின்றன. இப்படி ஏராளமான குறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

எனவே விழுப்புரம் ரயில் நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த தென்னக ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Oct 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.